வணங்குதல்
பொதுவாக formal
காலை / பகல் நேரத்தில் : Bonjour (பொன்ஜூர்) - வணக்கம் good morning
மாலை / இரவு நேரத்தில் : Bonsoir (பொன்சுவார்) - வணக்கம் good evening
நண்பர்களுடன் / நெருக்கமானவர்களிடம் informel
Salut (சலு) - வணக்கம் Hi
நலம் விசாரித்தல்
பொதுவாக formal
Comment allez-vous ? (கொமான் தலே வூ?) - எப்படி இருக்கிறீர்கள்?
நண்பர்களுடன் / நெருக்கமானவர்களிடம் informel
Comment ça va? (கொமான் ச வா?) - எப்படி இருக்கிறீர்கள்?
Comment vas-tu ? (கொமான் வா து ?) - எப்படி இருக்கிறாய் ?
ça va ? (ச வா ? ) சுகமா ?
புதினம் கேட்டல்
பொதுவாக formal
Qu’est-ce que vous faites maintenant ? (கெஸ்கு வூ பெத் மன்துனம் ?) - நீங்க இப்ப என்ன பண்றீங்க?
Qu’est-ce que vous me racontez de beau ? (கெஸ் கு வு மு றக்கோந்தே து போ ?) லேட்டஸ்ட் நியூஸ் என்ன?
Quelles sont les dernières nouvelles ? (கெல் சோங் லே தேர்நியேர் நுவேல் ?) லேட்டஸ்ட் நியூஸ் என்ன?
நண்பர்களுடன் / நெருக்கமானவர்களிடம் informel
Quoi de neuf ? (குவா து நேவ் ?) Quoi de beau ? (குவா து போ ?) என்ன புதினம் ? What’s new ? என்ன நடக்குது ? what’s happened ?
Il se passe quoi dans ta vie ? ( இல் சு பாஸ் குவா தான் தா வி ? ) எப்படி போகுது வாழ்க்க ? What's going on in your life?
Tu me racontes quoi ? (து மு றக்கோந் குவா து நேவ் ?) புதுசா என்ன சொல்ற ? What’s up ?
Qu’est-ce que tu deviens ? ( கெஸ் கு து திவியன் ?) நீ இப்ப என்ன செய்யிற ?
பிரியாவிடை
பொதுவாக formal
Au revoir (ஓ ரெவ்வார்) - சென்றுவருகிறேன் bye
à bientôt (அ பியன்தோ) - மீண்டும் சந்திப்போம் see you soon
A tout à l’heure (அ தூ த லேர் ) - பிறகு சந்திப்பம் see you later
நண்பர்களுடன் / நெருக்கமானவர்களிடம் informel
Salut (சலு ) - கிளம்புறன் bye
வரவேற்றல்
பொதுவாக formal
Bienvenue (பியன் வினு ) வாருங்கள் welcome
Enchanté (e) (ஆண்சாந்தே ) சந்தித்ததில் மகிழ்ச்சி nice to meet you
நன்றி கூறுதல்
பொதுவாக formal
Merci (மேர்சி ) - நன்றி
Merci beaucoup (மேர்சி பொக்கு ) - மிக்க நன்றி